இசுட்ரோன்சியம் பெர்குளோரேட்டு
இசுட்ரோன்சியம் பெர்குளோரேட்டு (Strontium perchlorate) என்பது Sr(ClO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மையான தூளாக அல்லது நிறமற்ற படிகங்களாக இச்சேர்மம் காணப்படுகிறது. வலிமையான ஆக்சிசனேற்றியான இது சிவப்பு நிற தீப்பிழம்புகளை அளிக்கிறது. வெடிப்பறிவியல் துறையில் இசுட்ரோன்சியம் பெர்குளோரேட்டு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மிகவும் பொதுவான இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு இத்துறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. திட-உந்துசக்தி இராக்கெட்டுகளில் திரவ ஊசி உந்துதல் திசையன் கட்டுப்பாடு அமைப்பில் நிலையான முனை மூலம் கட்டுப்பாட்டை செயல்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது. ஐப்போகுளோரைட்டுகளுடன் இசுட்ரோன்சியம் குளோரேட்டைச் சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தி இசுட்ரோன்சியம் பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம். கால்சியம் பெர்குளோரேட்டுடன் ஒப்பிடக்கூடிய வகையிலான Pbca என்ற இடக்குழுவில் செஞ்சாய்சதுரக் கட்டமைப்பில் இசுட்ரோன்சியம் பெர்குளோரேட்டு படிகமாகிறது.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia