எர்னஸ்ட் லாரன்சு
எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்சு (Ernest Orlando Lawrence, ஆகஸ்ட் 8, 1901 - ஆகஸ்ட் 27, 1958) ஓர் அமெரிக்க அறிவியலறிஞர் ஆவார். இவர் சுழற்சியலைவியைக் கண்டறிந்ததற்காக 1939 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்,[1] யுரேனிய ஐசோடோப்பை பிரித்தெடுக்கும் முறையைக் கண்டறிந்ததற்காகவும், அறியப்படுகிறார். தெற்கு டகோடா பல்கலைக்கழகம் மற்றும் மினசோட்டா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டதாரியான லாரன்ஸ் 1925 ஆம் ஆண்டு யேலில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1928 ஆம் ஆண்டில் அவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார். ஒருநாள் மாலையில் லாரன்ஸ் நூலகத்தில் அதிக வேக துகள்களை உற்பத்தி செய்யும் ஒரு முடுக்கியின் வரைபடத்தை கண்டார். அந்த வரைபடத்தால் கவரப்பட்டு ஆராயும் போது இரண்டு மின்காந்த புலங்களுக்கிடையே வட்டப்பாதையில் முடுக்கப்படும் கலன் பற்றிய யோசனை வந்தது. இந்த யோசனையின் வெளிப்பாடு தான் சைக்ளோட்ரானாக அமைந்திருந்தது. லாரன்ஸ் பெரிய மற்றும் அதிக விலையுயர்ந்த சைக்ளோடான்களை தொடர்ச்சியாக உருவாக்கினார். 1936 ஆம் ஆண்டு அவரது கதிர்வீச்சு ஆய்வுக்கூடம் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ துறையாக ஆனது. லாரன்ஸ் அதன் இயக்குநராக இருந்தார். இயற்பியலுக்காக சைக்ளோட்ரோனைப் பயன்படுத்துவதோடு கூடுதலாக ரேடியோ ஐசோடோப்களின் மருத்துவ பயன்களை ஆய்வு செய்வதில் லாரன்ஸ் ஆர்வம் காட்டினார். இரண்டாம் உலகப் போரின் போது, லாரன்ஸ் தனது கதிர்வீச்சு ஆய்வகத்தில் மின்காந்தத்தை பயன்படுத்தி ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் முறையை உருவாக்கினார். கலூட்ரான் என்ற இயந்திரத்தை இதற்காக பயன்படுத்தினார். டென்னெஸியில் உள்ள ஒக் ரிட்ஜ் ல் மிகப் பெரிய மின்காந்தத்தை பயன்படுத்தி ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் ஆலையை உருவாக்கினார். இது Y-12 என அழைக்கப்பட்டது. திறனற்றதாக அது இருந்தாலும் வேலை செய்தது. போருக்குப் பின்னர், லாரன்ஸ் அரசு ஆதரவோடு பெரிய அறிவியல் திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். அதிக அளவு செலவு செய்து மிகப்பெரிய இயந்திரங்களை உருவாக்குவதற்கு “பெரிய அறிவியல்” என்ற திட்டத்தை தொடங்கி பிரசாரம் செய்தார். கலிபோர்னியாவின் லிவர்மரில் அமைந்த இரண்டாம் அணு ஆயுத ஆய்வகத்திற்கு எட்வர்ட் டெல்லர் பிரச்சாரத்தை வலுவாக ஆதரித்தார். அவருடைய இறப்புக்குப் பிறகு, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆட்சியாளர்கள் லாரன்ஸ் லிவர்மோர் நேஷனல் லேபாரட்டரி மற்றும் லோரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்திற்கு அவருடைய பெயரையே வைத்து அவரை கவுரவித்தது. 1961 ஆம் ஆண்டில் பெர்க்லீயில் கண்டுபிடித்த 103 வது தனிமத்திற்கு லென்டூரியம் என்று பெயரிடப்பட்டது அவருக்கு கிடைத்த மிக்ப் பெரிய கெளரவம். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia