ஹிடேகி யுகாவா
ஹிடேகி யுகாவா(Hideki Yukawa, 23 ஜனவரி 1907 – 8 செப்டம்பர் 1981) ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர். அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் , எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தவர். இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர். ஜப்பான் நாட்டில் முதன் முதலாக நோபல் பரிசு பெற்ற அறிஞர். இளமைஹிடேகி 1907 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை 'டகுஜி ஒகாவா' என்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர் கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார்.1929-லிருந்து நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார். 1932-ல் இவர் 'சுமிகோ' என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். பணிகள்1932-39 க்கு இடைப்பட்ட கலத்தில் விரிவுரையாளராகவும், பிறகு ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட ஹிடேகி 1935-ல் ஆதாரத் துகள்களுக்கிடையே ஏற்படும் உள்வினைகள் என்பது பற்றி இவருடைய ஆய்வறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை உருவாக்கியிருந்தார். அதில் மெசான் என்ற பொருளின் வெளிப்பாட்டைக் குறிப்பிட்டார். 1937-ல் அமெரிக்க இயற்பியலாளர்கள் காஸ்மிக் கதிர்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை மெசான் என்ற துகளைக் கண்டு பிடித்தது இவருடைய ஆய்வுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது. எனவே, மெசான் கொள்கையை விரிவாக்குவதில் இவருடைய சொந்தக் கருத்துகளின் அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டார். 1938-ல் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது.1947-லிருந்து ஆதாரத் துகள்களின் பொதுக் கொள்கை அடிப்படையில் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1948-ல் அமெரிக்காவிலும் 1949 முதல் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் வருகை தரும் பேராசிரியராக செயல்பட்டார். சிறப்புகள்
மறைவுமுதன் முதலில் ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த ஹிடேகி யுகாவா 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் கியோட்டோ என்ற ஊரில் காலமானார். இவற்றையும் பார்க்கஉசாத்துணைஅறிவியல் ஒளி, ஜனவரி 2011 இதழ். |
Portal di Ensiklopedia Dunia