செர்கே அரோழ்சி
செர்கே அரோழ்சி (Serge Haroche) (பிறப்பு செப்டம்பர் 11, 1944) ஒரு பிரான்சிய இயற்பியலாளர். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் பிரான்சுக் கல்லூரியில் (Collège de France) பேராசிரியராகவும், குவாண்டம் இயற்பியல் சிறப்புப் பேராசிரியராகவும் இருக்கின்றார். அரோழ்சி 2012 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசை தாவூது வைன்லாந்து (David J. Wineland) என்பாருடன் சேர்ந்து வென்றுள்ளார். இவர்களின் புதுக்களம் தோற்றுவித்த ஆய்வாகக் கருதப்படும், தனிப்பட்ட குவாண்டம் ஒருங்கியங்களைக் கட்டுப்படுத்துவது பற்றிய செய்கள, செய்முறை ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது- இவை ஒளியன்களைப் பற்றியவை.[1]. குவாண்டம் துகள்களைத் தம் சூழலில் இருந்து தனிமைப்படுத்திக் காண்பது அரிது. புற உலகில் இயங்கும் பொழுது இவை தம் தனித்தன்மையான பண்புகளை இழக்கின்றன, எனவே இவற்றின் வியப்பூட்டும் குவாண்டம் பண்புகளை நேரடியாக உளவி (probe) அறிய முடியவில்லை. ஆனால் இவருடைய சிறப்பான ஆய்வின் பயனாய் ஒளியனைப் பிடிபட்ட நிலையில் உள்ள அணுக்களோடு வினையுறவு கொள்ளச் செய்து, பல அடிப்படைப் பண்புகளை அறிய உதவுகின்றது. வருங்காலத்தில் அணுக் கடிகாரத்தைவிட மிக மிகத் துல்லியமான கடிகாரங்கள் அமைக்க முடியும். வாழ்க்கைக் குறிப்புகள்செர்கே அரோழ்சி, மொராக்கோவைச் சேர்ந்த பிரான்சிய யூதப் பரம்பரையில் வந்தவர். இவர் பாரிசில் வாழ்கின்றார். இவருடைய தாய் உருசியர், ஓர் ஆசிரியர்; தந்தை வழக்குரைஞர்[2] 1956 ஆம் ஆண்டு மொராக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற பின்பு மொராக்கோவை விட்டுப் போனார். அரோழ்சி பிரான்சிய இயற்பியல் குமுக உறுப்பினர், ஐரோப்பிய இயற்பியல் குமுக உறுப்பினர், அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் பேராளர் (Fellow). இவருடைய தந்தையின் உடன்பிறப்பு இரஃபியேல் அரோழ்சி ஓர் இசைப் பாடலாசிரியரும் நடிகரும் ஆவார்[3] ஆய்வுத் துறைஅரோழ்சி பாரிசில் இருக்கும் எக்கோலெ நோர்மாலெ சுப்பீரியர் நிறுவனத்திலுள்ள தன் உடன் ஆய்வாளர்களோடு செய்த குவாண்டம் அலைமுகக் கலைவு (quantum decoherence) பற்றிய செய்முறை ஆய்வுகளுக்காக நன்கு அறியபப்டுகின்றார். குறிப்பிட்ட சில வெளியீடுகள்
பரிசுகளும் பெருமைகளும்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia