இராய்னர் வெய்சு
இராய்னர் வெய்சு (Rainer Weiss, பிறப்பு: செப்டம்பர் 29, 1932) ஒரு அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் ஈர்ப்பு விசை சார்ந்த இயற்பியல் மற்றும் வானியற்பியலில் இவரது பங்களிப்பிற்காக நன்கறியப்பட்டவர். இவர் எமெரிடசில் உள்ள மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக உள்ளார். லைகோ (LIGO) எனும் அடிப்படைச் செயல்பாட்டில் பயன்படும் சீரொளி குறுக்கீட்டுமானிையக் கண்டுபிடித்தமைக்காக சிறப்பு பெற்றவர் ஆவார். இராய்னர் வெய்சு கோபெ செயற்கைமதி (COBE) அறிவியல் பணிக்குழுவின் தலைவராக உள்ளார்.[1][2][3] 2017 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினை கிப் எஸ். தோர்ன் மற்றும் பேரி சி. பேரிஷ் ஆகியோருடன் இணைந்து பகிர்ந்து கொள்கிறார். சீரொளி குறுக்கீட்டுமானியின் கண்டுபிடிப்பு மற்றும் ஈர்ப்பு சக்தியின் அலைகளை இக்கருவியின் வாயிலாக உற்றுநோக்கிக் கண்டறிந்த தீர்மானிக்கத்தகுந்த பங்களிப்புகளுக்காக இவர்களுக்கு நடப்பு ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.[4][5][6][7] லைகோஅணுவின் அளவில் பத்து இலட்சத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ள நுண்ணிய ஈர்ப்பு அைலகைள இனம் காண கடந்த 50 ஆண்டுகளாக அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர். எனினும், இராய்னர் வெய்சு, கிப் எஸ். தோர்ன் மற்றும் பேரி சி. பேரிஷ் ஆகியோர் புதுமையான முறையில் ஈர்ப்பு அைலகைள இனம் காணும் கருவிையக் கொண்டு கடந்த இரண்டு வருடத்துக்குள் நான்கு முறை ஈர்ப்பு அலைகளை இனம் கண்டுள்ளனர். பெரும் கருந்துைளகள் அல்லது நியூட்ரான் விண்மீன்கள் வேகவேகமாகச் சுழன்றுகொண்டு ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளும் போது ஏற்படும் ஈர்ப்பு அலைகளை நுட்பமான கருவிகளால் உணர முடியும். ஈர்ப்பு அலை ஏற்படுத்தும் சுருக்கமானது மிக மிக நுணுக்கமானது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவை ஒரு அணு அளவு நுட்பமாக அளவிடுவது போன்றது இது. இந்த நுணுக்கமான வேறுபாட்டை சீரொளி குறுக்கீட்டுமானி மூலமாக (Laser Interferometer) சீரொளி குறுக்கீட்டுமானி ஈர்ப்பலை நோக்குக்கூடத்தில் (லைகோ) ( LIGO - Laser Interferometer Gravitational-wave Observatory) வைத்து உற்றுநோக்கிக் கண்டறிந்தமைக்காகத்தான் மேற்காண் மூவருக்கும் 2017 ஆம் ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.[8] இளமைக்கால வாழ்க்கை மற்றும் கல்விஇராய்னர் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் நாள் செருமனியில் உள்ள பெர்லின் நகரில் பிறந்தார்.[9][10] இராய்னர் வெய்சின் தாயார் கிறித்தவரும் நடிகரும் ஆவார்.[11] இராய்னர் வெய்சின் தந்தையார், ஒரு மருத்துவரும், நரம்பியல் நிபுணரும், உளப்பகுப்பாய்வாளரும் ஆவார். இவர் அஸ்கனாசு யூதராகவும், ஜெர்மானிய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பிராகவும் இருந்ததால் ஜெர்மனியை விட்டு வெளியே துரத்தப்பட்டார். அந்தக் குடும்பம் முதலில் ப்ராக் நகருக்குச் சென்றது. ஆனால், 1938 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மியூனிச் ஒப்பந்தப்படி ஜெர்மனி செக்கோஸ்லாவாகியாவை ஆக்கிரமித்த பிறகு, அங்கிருந்து வெளியேறினர். ஸ்டிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த லூயிஸ் அவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு விசாக்களைப் பெற அவர்களுக்கு உதவினார்.[12] இராய்னர் வெய்சு தனது இளமைப்பருவத்தை நியூயார்க் நகரத்தில் கழித்தார். அங்கு அவர் கொலம்பியா இலக்கணப் பள்ளியில் படித்தார். பின்னர் இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia