கர்ணபிரயாகை
மக்கள் தொகை பரம்பல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 7 வார்டுகளும், 1,999 வீடுகளும் கொண்ட கர்ணபிரயாகையின் பேரூராட்சியின் மக்கள்தொகை 8,297 ஆகும். அதில் ஆண்கள் 4,555 மற்றும் பெண்கள் 3,742 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 822 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 91.78% ஆகும். 6-வயதிற்குட்பட்ட குழந்தைகள் 961 which is (11.58%) ஆகவுள்ள கர்ணபிரயாகை பேருராட்சியின் மக்கள்தொகையில் இந்துக்கள் 93.88%, இசுலாமியர் 5.46%, கிறித்தவர்கள் 0.28%, சீக்கியர்கள் 0.31% மற்றவர்கள் 0.07% ஆகவுள்ளனர்.[1] அமைவிடம்உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலையில் 1,451 மீட்டர் (4,760 அடி) உயர்த்தில் உள்ள கர்ணபிரயாக் நகரம் 30°16′N 79°15′E / 30.27°N 79.25°E பாகையில் அமைந்துள்ளது.[2] சாலைப் போக்குவரத்துசாலைப் போக்குவரத்துபுதுதில்லி-பத்திரிநாத் மற்றும் மணா கணவாயை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 58, கர்ணபிரயாகை வழியாகச் செல்கிறது.
இதனையும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia