ருத்ரபூர்ருத்ரபூர் என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். புது தில்லிக்கு வடகிழக்கில் சுமார் 250 கி.மீ. (160 மைல்) தொலைவிலும், தேராதூனுக்கு தெற்கே 250 கி.மீ. (160 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. ருத்ராபூருக்கு 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளது. இது 16 ஆம் நூற்றாண்டில் மன்னர் ருத்ரா சந்த் என்பவரால் நிறுவப்பட்டது. இது குமாவோனின் தாராய் பிராந்தியத்தின் ஆளுநரின் இல்லமாக இருந்தது. இந்த நகரம் உதம்சிங் நகர் மாவட்டத்தின் தலைமையகமாக இன்றும் ஒரு பெரிய தொழில்துறை மற்றும் கல்வி மையமாக திகழ்கிறது. ருத்ரபூர் 27.65 கி.மீ. 2 பரப்பளவில் வளமான தெராய் பகுதியில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி 140,857 மக்கள் வசிக்கின்றனர். ருத்ரபூர் உத்தரகண்ட் மாநிலத்தில் ஐந்தாவது அதிக மக்கட் தொகை கொண்ட நகரமாகும் . உத்தரகண்ட் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்பட்டதில் இருந்து கல்வியறிவு வளர்ச்சி மற்றும் அதிக வேலைவாய்ப்புடன் நகரம் விரைவான வளர்ச்சியை அடைந்துள்ளது. [சான்று தேவை] வரலாறு1837 ஆம் ஆண்டில் ருத்ரபூர் ரோஹில்கண்ட் மாவட்ட ஆட்சியரகத்துடன் இணைக்கப்பட்டது.[1] 1858 ஆம் ஆண்டில் குமாவ்ன் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இது 1861 ஆம் ஆண்டில் இல் மீண்டும் ரோஹில்கண்ட் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டது.[1] 1864-65 ஆம் ஆண்டில் முழு "தாராய் மற்றும் பவார் அரசு சட்டத்தின்" கீழ் வைக்கப்பட்டது. 1891 ஆம் ஆண்டில், தாராய் மாவட்டம் அகற்றப்பட்டது. மேலும் ருத்ராபூர் புதிதாக உருவாக்கப்பட்ட நைனிடால் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு ருத்ரபூர் மற்றும் நைனிடால் மாவட்டத்தின் பிற பகுதிகள் ஐக்கிய மாகாணங்களுடன் இணைக்கப்பட்டன. பின்னர் அவை உத்தரபிரதேச மாநிலமாக மறுபெயரிடப்பட்டன. இந்தியாவின் முதல் வேளாண் பல்கலைக்கழகமான உத்தரப்பிரதேச வேளாண் பல்கலைக்கழகம் ருத்ராபூருக்கு அருகில் 17 நவம்பர் 1960 இல் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் ஜவஹர்லால் நேரு அவர்களால் திறக்கப்பட்டது.[2] 1984 ஆம் ஆண்டில் புளூஸ்டார் நடவடிக்கைக்கு பிறகு பல சீக்கிய தீவிரவாதிகள் பஞ்சாபில் இருந்து தப்பி உ.பி. தாராயில் தஞ்சம் புகுந்தனர்.[3] பின்னர் 1991 இல் பல வெடிப்புகள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .1991 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ருத்ராபூர் சந்தையில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.[4] அக்டோபர் 17, 1991 அன்று நகரத்தில் ராம்லீலா கொண்டாட்டத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் 41 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[5] 1994 ஆண்டுகளில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு தனி மாநிலத்திற்கான கோரிக்கை பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[6] ருத்ராபூர் உதம் சிங் நகர் மாவட்டத்தின் தலைமையகமாக மாற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று இந்திய நாடாளுமன்றம் உத்தரபிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தை ஆம் தேதி நிறைவேற்றிய பின்னர் ருத்ராபூர் இந்திய குடியரசின் 27 வது மாநிலமான உத்தரகண்டின் ஒரு பகுதியாக மாறியது.[7] புள்ளிவிபரங்கள்2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி ருத்ரபூரில் 88,720 மக்கள் வசித்தனர்.[8] இது 2011 ஆம் ஆண்டில் 140,857 ஆக அதிகரித்துள்ளது.[9] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்கள் 53% வீதமும், பெண்கள் 47% வீதமும் உள்ளனர். ருத்ராபூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 71% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 78% வீதமாகவும், பெண் கல்வியறிவு 63% வீதமாகவும் உள்ளது. ருத்ராபூரில் 14% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.[9] 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ருத்ராபூரில் 80.29% வீதம் இந்துக்களும், 15.76% வீதம் இஸ்லாமியரும் உள்ளனர். கிறித்துவம் 0.43% வீதமும், சமண மதம் 0.12% வீதமும், சீக்கியம் 3.17% வீதமும், பௌத்தம் 3.17% வீதமும் பின்பற்றப்படுகின்றது. சுமார் 0.03% பேர் 'பிற மதம்' என்றும், சுமார் 0.17% பேர் 'குறிப்பிட்ட மதம் இல்லை' என்றும் கூறியுள்ளனர்.[10] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia