கதார்மல் சூரியக் கோயில்![]()
கதார்மல் சூரியக் கோயில் (Katarmal) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில், அல்மோரா மாவட்டத்தில் தொலைதூரத்தில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான சூரியக் கோயில் உள்ளது. அமைவிடம்இது கோசி கிராமத்திலிருந்து 1.5 கி.மீ. தொலவிலும், மாவ்ட்டத் தலமையிடமான அல்மோராவிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1] மேலும் நைனிதாலிருந்து 70 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[2] இது இமயமலையில் 2116 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கிராமத்தின் சூரியக் கோயிலைப் பார்க்க நைனிதாலிருந்து சாலை வசதி உள்ளது.[3] சூரியக் கோயில்கதார்மல் கிராமத்தில் உள்ள சூரியக் கோயில் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1] இச்சூரியக் கோயிலை கட்டிய கத்தர்மல்லா எனும் கத்தியுரி மன்னர், இச்சூரியக் கோயில் வளாகத்தில் 44 தெய்வங்களுக்கு சிறு கோயில்கள்களை நிறுவினார்.[2] இச்சூரியக் கோயில் வளாகத்தில் சிவன், பார்வதி மற்றும் லெட்சுமி, நாராயணன் போன்ற தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia