ரிஷிகங்கா ஆறு
ரிஷிகங்கா ஆறு (Rishiganga or Rishi Ganga) இந்தியாவின் வடக்கில் அமைந்த உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் பாய்கிறது. இமயமலையின் சிவாலிக் மலைத் தொடர்களில் ஒன்றான நந்தா தேவி பனிக்கொடுமுடிகளில், முக்கியமாக ரிஷிகங்கா கொடுமுடி, தட்சினி கங்கா கொடுமுடிகளிலிருந்து ரிஷி கங்கா ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு நந்தா தேவி தேசியப் பூங்கா வழியாக பாய்ந்து இறுதியில் சமோலி மாவட்டத்தில் உள்ள ரெய்னி கிராமத்தில் பாயும் தௌலி கங்கா ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆறு 40 கிலோமீட்டர் நீளம் கொண்டது. 2021 உத்தராகண்ட் பனிப்பாறை வெடிப்பு வெள்ளம்7 பிப்ரவரி 2021 காலை 10.45 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு வெள்ளத்தால், ரிஷிகங்கா ஆறு மற்றும் தௌலிகங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ரெய்னி கிராமத்தில் பாயும் ரிஷி கங்கா ஆற்றில் குறுக்கே கட்டப்பட்ட அணையும், தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையமும் பலத்த சேதம் ஏற்பட்டதுடன், பல மனித உயிர்களும் பலிகளும் பலியானது.[1][2] படக்காட்சிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia