கோமுகம்![]() ![]() கோமுகம் அல்லது பசுமுகம் (Gomukh) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரியின் பனி மூடிய கொடுமுடிகளிலிருந்து பாகீரதி ஆற்றின் உற்பத்தியாகும் இடமாகும். பாகீரதி ஆறு, கங்கை ஆற்றின் தாய் ஆறு ஆகும். இமயமலையில் அமைந்துள்ள கோமுகம், உத்தரகாசி மாவட்டத்தில் 13,200 அடி (4,023 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனிதத் தலமான கங்கோத்ரி கோமுகத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலையேற்ற வீரர்களுக்கு கோமுகம் முக்கியமான இடமாகும்.[1][2] பெயர்க் காரணம்வட மொழியில் கோ என்பதற்கு பசு என்றும், முக் என்பதற்கு முகம் என்றும் பொருளாகும். இக்கொடுமுடி பசுவின் முகம் போன்று காணப்படுவதால் கோமுகம் என்று பெயராயிற்று. புவியியல்![]() கோமுகம், கங்கோத்திரியிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், 4255 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. பனிபடர்ந்த கங்கோத்ரி கொடுமுடியின் பசுவின் முகவாயில் போன்று அமைந்த கோமுகத்திலிருந்து, கங்கை ஆற்றின் தாய் ஆறான பாகீரதி ஆறு உற்பத்தி ஆகிறது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia