உத்தராகண்டு அரசு
உத்தராகண்டு அரசு என்பது உத்தரகண்ட் மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது செயலாக்கம், நீதித் துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. அரசின் தலைமைப் பொறுப்பை முதலமைச்சர் வகிப்பார். இவருக்கு அதிக அதிகாரம் இருக்கும். உத்தராகண்டு அரசின் தலைமையகமும் சட்டமன்றத்தின் தலைமையகமும் தேராதூன் நகரில் உள்ளன. உத்தராகண்டு உயர் நீதிமன்றம், நைனித்தாலில் உள்ளது.[1] தற்போதைய சட்டவாக்கத் துறை ஓரவை முறைமை கொண்டது. (சட்ட மேலவை இருக்காது. சட்டமன்றம் மட்டும் இருக்கும்.) உத்தராகண்டின் சட்டமன்றத்தில் 71 உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில் 70 உறுப்பினர்கள், சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர்கள் ஆவர். ஆங்கிலோ இந்தியர் ஒருவரை ஆளுநர் நியமிப்பார். மாநிலச் சட்டமன்றம் ஐந்தாண்டு காலம் வரை இயங்கும். பின்னர், தேர்தல் நடத்தப்பட்டு புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.[2] சான்றுகள்
இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia