கௌரி குண்டம்
கௌரி குண்டம் (Gauri Kund) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்திரப்பிரயாகை மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்த கௌரி குண்டம், இந்துக்களின் புனித யாத்திரைத் தலம் ஆகும்.[1][2] இது உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தின் இமயமலையில் 6,520 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கௌரி குண்டத்தில் வெந்நீர் ஊற்றுகள் ஊரும் குண்டம் உள்ளது.[3] இத்தலத்தில் உள்ள குளத்தில் குளித்த பின்னரே பார்வதி தேவி, சிவபெருமானை மணந்து விநாயகரை உருவாக்கியதாக இந்து தொன்மவியல் நம்பிக்கை ஆகும். கௌரி குண்டத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் இமயமலையில் கேதார்நாத் கோயில் உள்ளது. ரிஷிகேசிலிருந்து 220 கி.மீ. தொலைவில் கௌரி குண்டதில் அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் உள்ளது. கௌரி குண்டத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் கேதார்நாத் கோயில் உள்ளது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
30°39′00″N 79°01′00″E / 30.65000001°N 79.0166666767°E வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia