கலகண்டி மக்களவைத் தொகுதி
கலகண்டி மக்களவைத் தொகுதி (Kalahandi Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி நூவாபடா மாவட்டம் மற்றும் கலகண்டி மாவட்டத்தில் பரவிக்காணப்படுகிறது. சட்டசபை பிரிவுகள்2008ஆம் ஆண்டில் எல்லை மறுநிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றப் பிரிவுகள் கரியார், தரம்கர், கோக்சாரா, ஜுனாகர், பவானிபட்னா, நர்லா மற்றும் கேசிங்கா.[1] எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து, இந்தத் தொகுதியில் தற்போது பின்வரும் சட்டமன்றப் பிரிவுகள் உள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1952இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. கலகண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
தேர்தல் முடிவுகள்20242024 இந்தியப் பொதுத் தேர்தலின் நான்காவது கட்டத்தில் 13 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 4 சூன் 2024 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[2] இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மாளவிகா தேவி பிஜு ஜனதா தளம் வேட்பாளர் லம்போதர் நியாலை விட 1,33,813 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார்.
குறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்வார்ப்புரு:Odisha elections19°52′19″N 83°06′10″E / 19.871834°N 83.102733°E |
Portal di Ensiklopedia Dunia