சம்பல்பூர் மக்களவைத் தொகுதி
சம்பல்பூர் மக்களவைத் தொகுதி (Sambalpur Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த மக்களவைத் தொகுதி சம்பல்பூர் மாவட்டம் முழுவதையும், தியோகர் மற்றும் அனுகோள் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. சட்டசபை பிரிவுகள்எல்லை மறுநிர்ணயம் செய்வதற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள் பத்மாபூர், மெல்சமுண்டா, பிஜேபூர், பட்லி, பர்கர், சம்பல்பூர் மற்றும் ரைராக்கோல் ஆகும்.[1] நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுஎல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து, இந்தத் தொகுதியில் தற்போது பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
குச்சிண்டா மற்றும் தியோகர் சட்டமன்றத் தொகுதிகள் முன்பு தியோகர் மக்களவைத் தொகுதியில் இருந்தன. சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டில் ரெங்காலி சட்டமன்றத் தொகுதி நடைமுறைக்கு வந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. சம்பல்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்.[2]
தேர்தல் முடிவுகள்20242024 இந்தியப் பொதுத் தேர்தலின் ஆறாவது கட்டத்தில் 25 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டது.[3] வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தர்மேந்திர பிரதான், பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பிரணாப் பிரகாசு தாசை 1,19,836 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia