நபரங்குபூர் மக்களவைத் தொகுதி
நபரங்குபூர் மக்களவைத் தொகுதி (Nabarangpur Lok Sabha constituency-முன்னர் நவ்ராங்பூர் மக்களவைத் தொகுதியாக அறியப்பட்டது) கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 1967 முதல் 1998 வரை காகபதி பிரதானி 9 முறை இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதால் இது இந்திய தேசிய காங்கிரசின் பாதுகாப்பான தொகுதிகளில் ஒன்றாகும். சட்டசபை பிரிவுகள்2008ஆம் ஆண்டில் எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகளாக மல்கன்கிரி, சித்ரகொண்டா, கோட்பாத், நபரங்பூர், கொடிங்கா, தபுகாம் மற்றும் உமர்கோட் இருந்தன.[1] எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது, இந்தத் தொகுதியில் பின்வரும் சட்டமன்றப் பிரிவுகள் உள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 17 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. நபரங்குபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்.[2]
தேர்தல் முடிவுகள்20242024ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தலின் நான்காவது கட்டத்தில் 2024 மே 13 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[3] இதன்படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பலபத்ரா மாஜி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பிரதீப் குமார் மஜியை 87,536 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia