கோராபுட் மக்களவைத் தொகுதி
கோராபுட் மக்களவைத் தொகுதி (Koraput Lok Sabha constituency) என்பது ஒடிசாவில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி. இது இந்திய தேசிய காங்கிரசின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு ஓர் இடைத்தேர்தல் உட்பட நடைபெற்ற 18 தேர்தல்களில் 16 முறை இந்த இடத்தைக் காங்கிரசு வென்றுள்ளது. ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் கிரிதர் கமாங் 1972 முதல் 2004 வரை 9 முறை இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2024 இந்திய பொதுத் தேர்தலில் ஒடிசாவில் 21 மக்களவை இடங்களில் 20 இடங்களை பாஜக வென்றபோதும், இந்த இடத்தை வெல்லத் தவறிவிட்டது. காங்கிரசின் சப்தகிரி சங்கர் உலகா தொடர்ந்து 2ஆவது முறையாக 1.47 இலட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றார். மேலும் 2024 ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் 7 சட்டமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகளைக் காங்கிரசு கட்சி வென்றுள்ளது. சட்டசபை பிரிவுகள்இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள்.[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
கோராபுட் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
தேர்தல் முடிவுகள்20242024 இந்திய பொதுத் தேர்தலின் நான்காவது கட்டத்தில் 13 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[3] இதன் படி இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சப்தகிரி சங்கர் உலகா, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் கௌசல்யா கிககாவை 1,47,744 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
குறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்வார்ப்புரு:Odisha elections18°48′52″N 82°42′29″E / 18.814545°N 82.708125°E |
Portal di Ensiklopedia Dunia