பொட்டாசியம் ஐதராக்சைடின் சூடான கரைசல் வழியாக புரோமின் அனுப்பப்படும்போது பொட்டாசியம் புரோமேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. முதலில் நிலையற்ற பொட்டாசியம் ஐப்போபுரோமைட்டை உருவாக்குகிறது, இது விரைவாக விகிதவியலுக்கு ஒவ்வா முறையில் புரோமைடு மற்றும் புரோமேட்டாக மாறுகிறது:[2]
3 BrO−→ 2 Br− + BrO−3
பொட்டாசியம் புரோமைடு கரைசல்களை மின்னாற்பகுப்பு செய்தும் பொட்டாசியம் புரோமேட்டைத் தயாரிக்கலாம். இரண்டு முறைகளிலும் உள்ள பொட்டாசியம் புரோமைடு அதன் மிகக் குறைந்த கரைதிறன் காரணமாக உடனடியாகப் பிரிக்கப்படுகிறது. பொட்டாசியம் புரோமேட்டு மற்றும் புரோமைடு கொண்ட கரைசல் 0 பாகை செல்சியசு வெப்பநிலைவரை குளிர்விக்கப்படும் போது, கிட்டத்தட்ட அனைத்து புரோமேட்டுகளும் வீழ்படிவாகிவிடும். அதே சமயம் அனைத்து புரோமைடுகளும் கரைசலில் இருக்கும்..[2]
பயன்கள்
பொட்டாசியம் புரோமேட்டு பொதுவாக அமெரிக்காவில் மாவு மேம்படுத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது (ஐ எண் ஐ924). ரொட்டி தொழிலில் இது மாவை வலுப்படுத்தவும், அதிகமாக மேலெழும்பவும் செயல்படுகிறது. இது ஒரு ஆக்சிசனேற்ற முகவர் மற்றும் சரியான சூழ்நிலையில் ரொட்டிச் செயல்பாட்டில் புரோமைடாக குறைக்கப்படுகிறது.[3][4] இருப்பினும் இதை அதிகமாகச் சேர்த்தாலோ அல்லது ரொட்டியை நீண்டநேரம் வேகவைத்தாலோ அல்லது போதுமான அளவு குறைந்த வெப்பநிலையில் வேகவைத்தாலோ பொட்டாசியம் புரோமேட்டு எஞ்சியிருக்க நேரிடும். இதை உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும்.[4]
மால்ட் பார்லி உற்பத்தியில் பொட்டாசியம் புரோமேட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நிலைமைகளின் கீழ் பயன்படுத்தப்படுகிறது. முடிக்கப்பட்ட தயாரிப்புகள் தரநிலையுடன் அடையாளப்படுத்தப்படுகின்றன.[5]
நெறிப்படுத்தல்
பொட்டாசியம் ப்ரோமேட்டு ஒரு புற்றுநோய் ஊக்கியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6] உணவு, மருந்து மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் தெலானி விதிக்கு முன்பு வரை உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்த அனுமதித்தது. இவ்விதி புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களைத் தடைசெய்கிறது. 1958 ஆம் ஆண்டு முதல் இவ்விதி நடைமுறைக்கு வந்தது. 1991 ஆம் ஆண்டில் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ரொட்டித் தொழிலாளகளை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியது, ஆனால் இத் தடை கட்டாயப்படுத்தப்படவில்லை.
சப்பானிய ரொட்டித் தொழிலாளர்கள் 1980 ஆம் ஆண்டில் தாங்களாக முன்வந்து பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்துவதை நிறுத்தினர். இருப்பினும், யாமாசாகி ரொட்டி நிறுவனத்தினர் 2005 ஆம் ஆண்டில் இதன் பயன்பாட்டை மீண்டும் தொடங்கினர். இறுதி தயாரிப்பில் இருந்த இரசாயனத்தின் அளவைக் குறைக்க புதிய உற்பத்தி முறைகள் இருப்பதாகக் கூறினர்.[7]
ஐரோப்பிய ஒன்றியம், அர்கெந்தீனா, பிரேசில்,[8]கனடா, நைச்சீரியா, தென் கொரியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் பொட்டாசியம் புரோமேட்டு உணவுப் பொருட்களிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் இலங்கையிலும், 2005 ஆம் ஆண்டில் சீனாவிலும், [9] மற்றும் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவிலும்[10] தடைசெய்யப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் இது அனுமதிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு மே மாத தரவுகளின் படி அமெரிக்காவின் நியூயார்க்கு மாநிலம் பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது.[11]
கலிஃபோர்னியாவில், புரோமேட்டேற்ற மாவைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை அடையாளக்குறி தேவைப்படுகிறது.[12] 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கலிபோர்னியா பொட்டாசியம் புரோமேட்டின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்யும் சட்டத்தை இயற்றியது. சட்டம் 2027 இல் அமலுக்கு வருகிறது. பொட்டாசியம் புரோமேட்டை தடை செய்த முதல் அமெரிக்க மாநிலம் கலிபோர்னியாவாகும்.[13][14][15]
↑"Volume 13, Series 6, page 3136". Federal Register (compendium). Office of the Federal Register, National Archives and Records Service (in ஆங்கிலம்). Washington, DC: General Services Administration. 1948 – via Google Books.
↑"Potassium Bromate". Food Additives Permitted for Direct Addition to Food for Human Consumption (laws & regulations). U.S. Code of Federal Regulations. Food and Drug Administration (United States). section 172.730 – via ecfr.gov.