குரோமியம்(II) ஆக்சலேட்டு
குரோமியம்(II) ஆக்சலேட்டு (Chromium(II) oxalate) என்பது CrC2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்புநிகும்பு மற்றும் பலரின் கூற்றுப்படி, CrC2O4·2H2O சேர்மத்தை குரோமியம்(II) சல்பேட்டு ஐந்துநீரேற்றிலிருந்து வாயு நீக்கப்பட்ட நீர் கரைசலில் சோடியம் ஆக்சலேட்டு மற்றும் ஆக்சாலிக் அமிலத்தின் கலவையுடன் வினைபுரியச் செய்து தயாரிக்கலாம். எரிப்பு தனிம பகுப்பாய்வு, அகச்சிவப்பு நிறமாலை, வெப்பப்பருமனறி பகுப்பாய்வு மற்றும் தூள் எக்சு-கதிர் விளிம்பு விளைவு ஆகிய சோதனைகளின் மூலம் வகைப்படுத்தப்படும் ஒரு வெளிர் பச்சை நிற படிகப் பொருளை இவ்வினை உருவாக்குகிறது.[1] 4.65 போர் மேக்னட்டான் என்ற அளவிடப்பட்ட காந்தத் திருப்புத்திறன், குரோமியம் அயனி Cr-Cr பிணைப்பை உருவாக்கவில்லை என்றும், உயர்-சுழல் எண்முக ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளது என்றும் கூறுகிறது. இது MC2O4·2H2O (M = Mg, Fe, முதலியன) என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்ட பிற நேரியல் பலபடிசார் உலோக(II) ஆக்சலேட்டுகளின் அமைப்புடன் ஒத்துப்போகும்.[2] மந்தவாயு வளிமண்டலச் சூழலில் 140 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தப்படும்போது, இருநீரேற்று தண்ணீரை இழந்து நீரற்ற CrC2O4 சேர்மத்தை உருவாக்குகிறது. 320 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்துவது குரோமியம் ஆக்சைடுகளின் கலவையை உருவாக்குகிறது.[1] அமில நீர் கரைசல்களில் குரோமியம்(II) சில நிமிடங்களில் ஆக்சலேட்டை கிளைகோலேட்டாகக் குறைக்கும் என்பதைக் குறிக்கும் தரவுகளை மில்பர்ன் மற்றும் டாப் ஆகியோர் வழங்கியுள்ளனர். அமில நீர் கரைசல்களிலிருந்து தயாரிக்கப்பட்டால் குரோமியம்(II) ஆக்சலேட்டை ஒரு நிலையான Cr2+ இனமாக உருவாக்குவது குறித்து சில சந்தேகங்களை எழுப்புகிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia