பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு
பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு (Potassium peroxochromate) என்பது K3[Cr(O2)4].என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தை பொட்டாசியம் டெட்ராபெராக்சோகுரோமேட்டு(V) என்ற பெயராலும் அழைக்கிறார்கள். பாராகாந்தத் தன்மையும் செம்பழுப்பு நிறமும் கொண்ட திண்ம சேர்மமாக இது காணப்படுகிறது. +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் குரோமியம் காணப்படும் சில சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். டெட்ராபெராக்சோகுரோமேட்டு(V) இன் பொட்டாசியம் உப்பு என இவ்வுப்பை வகைப்படுத்துகிறார்கள். பெராக்சைடு ஈந்தணைவிகளால் மட்டும் நிலைப்புத்தன்மையை அடைகின்ற அணைவுச் சேர்மத்திற்கு இது உதாரணமாகும் [1]. பொட்டாசியம் குரோமேட்டையும் ஐதரசன் பெராக்சைடையும் சேர்த்து 0 º செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதால் பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு தயாரிக்கப்படுகிறது.
இடைநிலை விளைபொருளாக உருவாகும் டெட்ராபெராக்சோகுரோமேட்டு(VI) சேர்மமானது ஐதரசன் பெராக்சைடால் ஒடுக்கப்பட்டு பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு உருவாகிறது :[2][3]
இவ்வாறாக உருவாகும் ஒட்டுமொத்த வினையை பின்வரும் சமன்பாடாக எழுதலாம்.
உயர் வெப்பநிலைகளில் இச்சேர்மம் தன்னிச்சையாக சிதைவடைகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia