குரோமியம்(III) பெர்குளோரேட்டு
குரோமியம்(III) பெர்குளோரேட்டு (Chromium(III) perchlorate) Cr(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலப்பச்சை நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு அறுநீரேற்று வடிவில் Cr(ClO4)3·6H2O காணப்படுகிறது. குரோமியம்(III) பெர்குளோரேட்டு தண்ணீரில் கரையும். தயாரிப்புகுரோமியம்(III) ஆக்சைடு அல்லது குரோமியம்(III) ஐதராக்சைடை பெர்குளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் குரோமியம்(III) பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம்:
நீரேற்றுகள்குரோமியம் பெர்குளோரேட்டின் நீரேற்றுகள் பல அறியப்படுகின்றன. அறுநீரேற்று Cr(ClO4)3·6H2O [1] மற்றும் நோனாநீரேற்று Cr(ClO4)3·9H2O போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.[3] அனைத்து நீரேற்றுகளும் தண்ணீரில் கரையக்கூடியவையாகவும் நீலப்பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன. தொடர்புடைய சேர்மங்கள்குரோமியம்(III) பெர்குளோரேட்டு பொருத்தமான சூழ்நிலையில் NH3 உடன் வினைபுரிந்து ஆரஞ்சு நிற ஆறமீன் அணைவுச் சேர்மத்தை (Cr(ClO4)3·6NH3) உருவாக்கும். [4] Cr(ClO4)3(NH3)x என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்ட பிற சேர்மங்களும் அறியப்படுகின்றன. x = 3 ஆக இருக்கும் போது, இந்த சேர்மம் சிவப்பு நிறமாகவும், x = 4 அல்லது 5 ஆக இருக்கும் போது, இது ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். [5] ஆறமீன் அணைவுச் சேர்மம் வெடிக்கும் தன்மையை கொண்டதாகும்.[5] Cr(ClO4)3 ஐதரசீனுடன் சேர்ந்து வினைபுரிந்து ஊதா நிற Cr(ClO4)3·2N2H4 அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது. Cr(ClO4)3 யூரியாவுடன் சேர்ந்து வினைபுரிந்து Cr(ClO4)3·6CO(NH2)2 போன்ற அறுகோண வடிவமைப்பிலான அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia