குரோமியம்(III) அயோடைடு(Chromium(III) iodide) என்பது CrI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இது குரோமியம் மூவயோடைடு என்றும் அழைக்கப்படுகிறது. கருப்பு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் மற்ற குரோமியம் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது[2].
குரோமியம்(III) குளோரைடுடன் சமவடிவ மூலக அமைப்பைக் கொண்டுள்ள இச்சேர்மம் இரட்டையடுக்கு அணிக்கோவையுடன்கனசதுர வடிவ பொதிவமைப்பு அலகு அறை கொண்டதொரு படிகமாகும். இவ்வமைப்பில் குரோமியம் எண்முக ஒருங்கிணைப்பு வடிவத்தை வெளிப்படுத்துகிறது[3]
.
தயாரிப்பு மற்றும் பண்புகள்
குரோமியம் உலோகத்துடன் அதிகப்படியான அயோடினை 500 0செல்சியசுவெப்பநிலையில் நேரடியாக வினைப்படுத்தி குரோமியம்(III) அயோடைடு தயாரிக்கப்படுகிறது.
2 Cr + 3 I2 → 2 CrI3
மீத்தூய மாதிரி குரோமியம்(III) அயோடைடு தயாரிக்க வேண்டுமெனில் மேற்கண்ட முறையில் தயாரிக்கப்பட்ட குரோமியம்(III) அயோடைடு 700 T0செல்சியசுவெப்பநிலை அளவுக்கு சூடுபடுத்தி முதலில் குரோமியம்(II) அயோடைடாகச் சிதைவடையச் செய்யப்படுகிறது. பின்னர் இது மீண்டும் அயோடினேற்றம் செய்யப்பட்டு குரோமியம்(III) அயோடைடு தயாரிக்கப்படுகிறது[2].
குரோமியம்(III) அயோடைடு அறை வெப்பநிலையில் உள்ள காற்று அல்லது ஆக்சிசனுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தாலும் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. ஆனால், 200 0 செல்சியசு வெப்பநிலையில் இது ஆக்சிசனுடன் வினைபுரிந்து அயோடினை வெளியேற்றுகிறது. CrCl3 போலவே குரோமியம்(III) அயோடைடும் தண்ணீரில் குறைந்த அளவிலேயே கரைகிறது என்பதால் இயக்கவியலில் மந்தத்தன்மையுடன் காணப்படுகிறது. சிறிதளவு குரோமசயோடைடு சேர்ப்பதால் கரைசல் செயல்முறையில் வேகம் சற்று அதிகரிக்கிறது.
↑Gregory, N. W.; Handy, L. L. (1952). "Structural Properties of Chromium(III) Iodide and Some Chromium(III) Mixed Halides". J. Am. Chem. Soc74: 891–893. doi:10.1021/ja01124a009.