குரோமியம்(III) ஐதராக்சைடு
குரோமியம்(III) ஐதராக்சைடு (Chromium(III) hydroxide) என்பது Cr(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . இச்சேர்மம் நிறப்பூச்சாக, சாயமூன்றியாக மற்றும் வினையூக்கியாகக் கரிம வேதியியல் வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1] குரோமியம்(III) ஐதராக்சைடு வரையறுக்கப்படாத கட்டமைப்பும் குறைந்த கரைதிறனும் கொண்ட பலபடியாகும். ஈரியல்பு கரைப்பானிலும் வலுவான காரங்கள் மற்றும் வலுவான அமிலங்கள் இரண்டிலும் கரைகிறது.[2]
குரோமியம் உப்புக் கரைசலுடன் அமோனியம் ஐதராக்சைடு கரைசலைச் சேர்ப்பதன் மூலம் குரோமியம்(III) ஐதராக்சைடு பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. தூய Cr(OH)3 2020 ஆம் ஆண்டு வரை கனிம இனங்களில் இருப்பதாக அறியப்படவில்லை. இருப்பினும், ஆக்சி ஐதராக்சைடின் மூன்று இயற்கையான பலலுருவங்கள் அறியப்படுகின்றன: பிரேசுவெல்லைட், கிரிமால்டைட்டு மற்றும் கயனைட்டு என்பன இவ்வுருவங்களாகும். [3][4][5][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia