குரோமியம்(III) புரோமைடு
குரோமியம்(III) புரோமைடு (Chromium(III) bromide) என்பது CrBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் செலுத்தப்பட்ட ஒளியில் பச்சை நிறமாகவும் எதிரொளிக்கப்பட்ட ஒளியில் சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது. எத்திலீனின் சில்படிமமாதல் வினையின் வினையூக்கிகளுக்கு குரோமியம்(III) புரோமைடு முன்னோடியாக விளங்குகிறது. தயாரிப்புகுரோமியம் தூளுடன் புரோமின் ஆவியை ஒரு குழாய் அனல் உலையில் இட்டு 1000 0 செல்சியசு வெப்பநிலைக்கு வினைப்படுத்துவதால் குரோமியம்(III) புரோமைடு உருவாகிறது. தனிநிலை அல்லது தூய இரு எத்தில் ஈதருடன் சேர்த்து எஞ்சியிருக்கும் CrBr2 பிரித்தெடுக்கப்படுகிறது. அதேவேளையில் தனிநிலை இரு எத்தில் ஈதர் மற்றும் தனிநிலை எத்தனால் ஆகியவற்றால் கழுவப்பட்டு தூய்மைப் படுத்தப்படுகிறது[1]. குரோமியம்(III) ஆலைடுகளை ஒத்த வரிசைச் சேர்மங்களில் குரோமியம்(III) புரோமைடு தண்ணீரில் கரைந்து CrBr3(H2O)3 கரைசலைத் தருகிறது. இச்செயல்முறை வினையூக்கி அளவுக்கு ஒரு ஆக்சிசன் ஒடுக்கியைச் சேர்க்கும் பொழுது மட்டுமே நிகழ்ந்து CrBr2 வை [1] உருவாக்குகிறது. இவ்வாக்சிசன் ஒடுக்கியானது கரையாத திண்மத்தின் மேற்பரப்பில் குரோமச புரோமைடை உருவாக்கி அதைக் கரைத்து மீண்டும் குரோமியம்(III) ஆக உருவாக்குகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia