உயர் வெப்பநிலையில் கந்தகம் அல்லது ஐதரசன் சல்பைடுடன்குரோமியம் உலோகம் வினை புரிவதால் குரோமியம்(II) சல்பைடு உருவாகும். குரோமியம்(III) குளோரைடை ஐதரசன் சல்பைடுடன் வினைபுரியச் செய்வதன் மூலமும், ஐதரசனுடன்குரோமியம்(III) சல்பைடை சேர்த்து குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலமும் அல்லது குரோமியம்(II) குளோரைடுடன் இலித்தியம் சல்பைடை சேர்த்து ஈரிடப்பெயர்ச்சி வினைக்கு உட்படுத்துவதன் மூலமும் குரோமியம்(II) சல்பைடை உருவாக்க முடியும்.[5]
Cr + S -> CrS
Cr + H2S -> CrS + H2 >
2CrCl3 + 3H2S -> 2CrS + S + 6HCl
Cr2S3 + H2 -> 2CrS + H2S
Li2S + CrCl2 -> 2LiCl + CrS
இயற்பியல் பண்புகள்
குரோமியம்(II) சல்பைடு இரண்டு படிக மாற்றங்களுடன் கருப்பு நிறமான பாரா காந்தப் பண்புடைய படிகங்களை உருவாக்குகிறது::[6]
α-CrS, மேற்கட்டமைப்பு கட்ட நிலை, அறுகோணப் படிக அமைப்பு, அலகு அளவுருக்கள் a = 1.200 நானோமீட்டர், c = 1.152 நானோமீட்டர்.
β-CrS, ஒற்றைச்சரிவச்சு அமைப்பு, அலகு அளவுருக்கள் a = 0.594 நானோமீட்டர், b = 0.341 நானோமீட்டர், c = 0.563 நானோமீட்டர், β = 91.73°.
குரோமியம்(II) சல்பைடு ஒரு குறைக்கடத்தியாகும்.[7][8] வினையூக்கியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[9]
↑Wadhawan, Amar R.; Livi, Kenneth J.; Stone, Alan T.; Bouwer, Edward J. (2015-03-17). "Influence of oxygenation on chromium redox reactions with manganese sulfide (MnS(s))". Environmental Science & Technology49 (6): 3523–3531. doi:10.1021/es5057165. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-5851. பப்மெட்:25688449.
↑Riedel, Erwin; Janiak, Christoph (2011). Anorganische Chemie (in German). Walter de Gruyter. p. 732. ISBN978-3-11-022566-2.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)