கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்

தேவாரம் பாடல் பெற்ற
கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):ஐராவதேச்சுரம்
பெயர்:கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:மேலக் கோட்டூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கொழுந்தீஸ்வரர்,கொழுந்தீசுவரர், சமீவனேஸ்வரர்
தாயார்:மதுரபாஷிணி, தேனார் மொழியாள், தேனாம்பாள்
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:அமுதகூபம், முள்ளியாறு, சிவகங்கை, பிரம்மதீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவதீர்த்தம், விசுவகர்மதீர்த்தம், அரம்பை தீர்த்தம், மண்டை தீர்த்தம் என ஒன்பது தீர்த்தம்[1]
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில் என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத்தலங்களில் 111ஆவது சிவத்தலமாகும். திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி இடையில் இக்கோயில் அமைந்துள்ளது.[2]

கோயில்

இக்கோயிலில் மேற்கு பார்த்த கோயிலாகும். மூலவர் கோழுந்தீசுவரர் மேற்கு பார்த்தவன்னமும், அம்மன் தேனாம்பாள் கிழக்கு நோக்கி தனிச் சிற்றாலயத்தில் உள்ளார். தேனாம்பாள் பின்னிரு கரங்களில் ருத்திராக்கம், தாமரை மலர்களை ஏந்தியும், முன் வலக்கரத்தை அபய முத்திரைக் காட்டியும் உள்ளார்.[3]

வழிபட்டோர்

இத்தலத்தில் அரம்பையும் ஐராவதமும் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 257
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
  3. கேட்ட வரம் அருளும் கோட்டூர் கொழுந்தீஸ்வரர், எஸ். ஜெயசெல்வன், இந்து தமிழ் திசை 26 சூன் 2025

இவற்றையும் பார்க்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya