கோலாலம்பூர் மாநகர முதல்வர்
கோலாலம்பூர் மாநகர முதல்வர் (ஆங்கிலம்: Mayor of Kuala Lumpur மலாய்: Datuk Bandar Kuala Lumpur) என்பவர் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரின் உள்ளூர் அரசாங்கத்தின் தலைமை நிர்வாகி ஆவார். இவர் ஒவ்வோர் ஆண்டும், கோலாலம்பூர் மாநகர வரவு செலவு கணக்குகளைக் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் (Kuala Lumpur City Hall) சமர்ப்பிப்பார். ஆண்டு தோறும் ஏறக்குறைய 3 பில்லியன் ரிங்கிட் நிதியை நிர்வகிக்க வேண்டியது இவரின் பொறுப்பு ஆகும். 2018-ஆம் ஆண்டின் வரவு செலவுக் கணக்கின் படி, கோலாலம்பூர் மாநகர முதல்வர், 2.905 பில்லியன் ரிங்கிட் நிதியை நிர்வகித்து உள்ளார். வரலாறுகோலாலம்பூர் மாநகர் மன்றம்1972 பெப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் மாநகரம் எனும் தகுதியைப் பெற்றது. மலாயா நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு மாநகரத் தகுதி பெற்ற முதல் நகரமாக விளங்கியது. அப்போது அதன் பெயர் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (மலாய்: Dewan Bandaraya Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur City Hall). பின்னர், 1974 பெப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியானது.[1] 1978-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தின் புதிய தலைநகரமாகச் சா ஆலாம் நகரம் அறிவிக்கப்பட்டதும், கோலாலம்பூர் மாநகரம், சிலாங்கூர் மாநிலத் தலைநகரம் எனும் தகுதியில் இருந்து விடுபட்டது. கோலாலம்பூர் மாநகர முதல்வர்ஏப்ரல் 1, 1961 முதல் கூட்டாட்சி தலைநகர ஆணையர் கூட்டாட்சித் தலைநகர ஆணையர் (மலாய்: Pesuruhjaya Ibu Kota Persekutuan; ஆங்கிலம்: Federal Capital Commissioner) என அழைக்கப்பட்ட ஒற்றை நகராட்சியரால் ஆளப்பட்டது. பெப்ரவரி 1, 1972-இல் கோலாலம்பூருக்கு மாநகரமாக தகுதி வழங்கப்பட்டதும், நிர்வாக அதிகாரம் மாநகர முதல்வர் எனும் மேயருக்கு (மலாய்: Datuk Bandar; ஆங்கிலம்: Mayor) வழங்கப்பட்டது.[2] மாநகர முதல்வர் நியமனம்மாநகர முதல்வரை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டாட்சிப் பகுதிகளுக்கான அமைச்சர் நியமிக்கின்றார். 1970-இல் மாநகர உள்ளாட்சித் தேர்தல்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன. அதில் இருந்து நியமன முறைமை அமலில் உள்ளது. மே 14, 1990-இல் கோலாலம்பூர் உள்ளாட்சி மன்றத்தின் 100 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அப்போது கோலாலம்பூருக்கான கொடியும்; கோலாலம்பூர் மாநகருக்கான பாடலும் அறிமுகப் படுத்தப்பட்டன. மாநகர முதல்வர்கள் பட்டியல்1972 முதல் 13 மாநகர முதல்வர்கள் பதவியில் இருந்துள்ளனர். தற்போதைய மாநகர முதல்வராக மகதி சே நிகா உள்ளார்; இவர் 2020-இல் பதவியேற்றார்.[3] முன்னாள் மேயர்களின் பட்டியல்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia