செபுத்தே மக்களவைத் தொகுதி
![]() செபுத்தே மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Seputeh; ஆங்கிலம்: Seputeh Federal Constituency; சீனம்: 士布爹国会议席; என்பது கோலாலம்பூர் கூட்டடரசுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P122) ஆகும். செபுத்தே கூட்டரசுத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1986-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டு முதல் மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. பொது2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2022 Malaysian General Election) இந்தத் தொகுதியில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் திரேசா கோக் (Teresa Kok) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியின் பரப்பளவு 31 சதுர கி.மீ. 2022-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 124,805 வாக்காளர்கள் உள்ளனர். செபுத்தே மக்களவைத் தொகுதி
சான்று: https://live.chinapress.com.my/ge15/parliament/KUALALUMPUR செபுத்தே மக்களவை தேர்தல் முடிவுகள்
செபுத்தே மக்களவை வேட்பாளர் விவரங்கள்
உள்ளூராட்சி
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia