செராஸ் மக்களவைத் தொகுதி
செராஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Cheras; ஆங்கிலம்: Cheras Federal Constituency; சீனம்: 蕉赖国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P123) ஆகும். செராஸ் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து செராஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. செராஸ்கோலாலம்பூர் மாநகரத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப்பகுதி. மலேசியாவில் மக்கள் அதிகமாகவும்; நெருக்கமாகவும் வாழும் நகரங்களில் செராஸ் நகரமும் ஒன்றாகும். செராஸ் பகுதி இரு நாடாளுமன்ற மாகளவைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. 1974-ஆம் ஆண்டு வரையில் செராஸ் மக்களவைத் தொகுதி; உலு லங்காட் மாவட்டத்தின் கீழ் இருந்தது. 1995-ஆம் ஆண்டில் செராஸ் மக்களவைத் தொகுதி என்று ஒரு புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.
உலு லங்காட் மாவட்டம்முன்பு காலத்தில் செராஸ் நகர்ப்பகுதி, சிலாங்கூர் மாநிலத்தின், ஐந்தாவது பெரிய மாவட்டமான உலு லங்காட்டின் ஒரு பகுதியாக இருந்தது. செராஸ் பகுதியில் பெரும்பாலான கல்வி நிலையங்கள்; ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிகள் இருந்தன. 1974 பிப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தை உருவாக்குவதற்காக, செராஸ் மாவட்டத்தின் பெரும் பகுதி, மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[5] அதன் பின்னர் செராஸ் அதன் செல்வாக்கைச் சன்னம் சன்னமாக இழந்து விட்டது. மலேசியாவில் அதிக விலையில் கட்டப்பட்ட பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி இந்தத் தொகுதியில்தான் உள்ளது. 2 கோடி 10 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. ஒரு நவீன தமிழ்ப் பள்ளிக்கு உரிய அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள சிறந்த பள்ளியாக அறியப்படுகிறது.[6] செராஸ் மக்களவைத் தொகுதி
செராஸ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
செராஸ் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia