செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி
செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Setiawangsa; ஆங்கிலம்: Setiawangsa Federal Constituency; சீனம்: 斯迪亚旺沙国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P118) ஆகும். செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. செத்தியா வங்சாசெத்தியா வங்சா, கோலாலம்பூர் மாநகரத்தில், கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப் பகுதி ஆகும்.[5] கோலாலம்பூர் மாநகர மையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தப் புறநகருக்கு அருகில் அம்பாங் புறநகரம் அமைந்துள்ளது. செத்தியா வங்சா புற நகர்ப் பகுதியில் 4 முக்கிய குடியிருப்புகள் உள்ளன.[6]
தாமான் செத்தியா வங்சாதாமான் செத்தியா வங்சா, மற்றும் தியாரா செத்தியா வங்சா ஆகியவை செத்தியா வங்சா புறநகர்ப் பகுதியின் பரபரப்பான இடத்தில் அமைந்துள்ளன. புஞ்சாக் செத்தியா வங்சா மற்றும் புக்கிட் செத்தியா வங்சா ஆகியவை அமைதியான சூழலில் மலைகளின் மேல் அமைந்துள்ளன.[5] ஐலண்ட் & பெனின்சுலர் (Island & Peninsular (I&P) Group Sdn Bhd) எனும் நிறுவனத்தால் இந்த தாமான் செத்தியா வங்சா குடியிருப்பு உருவாக்கப்பட்டது. 1980-களில் இந்தக் குடியிப்பின் அடிவாரத்திலும்; நடு மலைப் பகுதிகளிலும் கட்டுமானங்கள் தொடங்கப்பட்டன.[6] செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி
செத்தியா வங்சா மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
செத்தியா வங்சா மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia