கெப்போங் மக்களவைத் தொகுதி
கெப்போங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu; ஆங்கிலம்: Batu Federal Constituency; சீனம்: 峇都爱国会) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P114) ஆகும். கெப்போங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து கெப்போங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. கெப்போங்கெப்போங் நகரம் கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 12 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள நகரங்கள்: ’கெப்போங்’ என்பது ஒரு மலாய்ச் சொல். "சூழ்" அல்லது "சுற்று" என்று பொருள். இந்த நகரம் ஒரு மலைத்தொடரால் சூழப்பட்டு உள்ளது. அதனால் அந்தப் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம். கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தின் 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் கெப்போங் ஒன்றாகும். இந்தத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பாக்காத்தான் ஹரப்பான் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த லிம் லிப் எங் (Lim Lip Eng) ஆவார்.[4] கெப்போங் மக்களவைத் தொகுதி
கெப்போங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
கெப்போங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia