தாமான் வாயூ கொமுட்டர் நிலையம்
தாமான் வாயூ கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Taman Wahyu Komuter Station; மலாய்: Stesen Komuter Taman Wahyu) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம் (Gombak District), தாமான் வாயூ வீடுமனைகள் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் நிலையமாகும். இந்த நிலையம் புலாவ் செபாங் வழித்தடத்தில், கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவையை வழங்கி வருகிறது.[1] மறுவடிவமைப்புக்குப் பிறகு, ஆகத்து 2010-இல் இந்த நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு முன்னரே அங்கு ஒரு தொடருந்து நிறுத்தம் இருந்தது. பிரித்தானிய காலனி ஆட்சியின் போது இந்த நிலையம் கென்ட் ஆல்ட் (Kent Halt) அல்லது கென்ட் நிலையம் (Kent Station) என்று அழைக்கப்பட்டது.[2] பொது1920-ஆம் ஆண்டுகளில், கோலாலம்பூர், செந்தூல் பகுதியில் இருந்த பத்துமலைக்குச் சென்ற தொடருந்துகள் இந்த இடத்தில் நின்று சென்றன. காலப் போக்கில் பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது; அதன் விளைவாகவ் பொதுமக்கள் இந்த தொடருந்து நிறுத்ததைப் பயன்படுன்படுத்துவதை நிறுத்திக் கொண்டனர்.[3] 2010-ஆம் ஆண்டில் பத்துமலை தொடருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு, அங்குள்ள தொடருந்து பாதை மின்மயமாக்கப்பட்டது. செந்தூல் - பத்துமலை வழித்தடத்தின் ஒற்றைப் பாதை இரட்டைப் பாதையாக மாற்றப்பட்டது. புதிய நிலையங்கள்அந்தக் கட்டத்தில் KC04 தாமான் வாயூ, KC03 கம்போங் பத்து மற்றும் KC02 பத்து கென்டன்மன் ஆகிய புதிய நிலையங்கள் உருவாக்கப்பட்டன; மற்றும் நிறுத்தங்களும் கட்டப்பட்டன.[4] தாமான் வாயூ நகர்ப்புறம், ஈப்போ சாலையின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம், ஈப்போ சாலை, கூச்சிங் சாலை, கெப்போங் சாலை வழியாக கோலாலம்பூர் நகர மையத்தை எளிதில் அணுகக்கூடிய வசதியை வழங்குகிறது.[5] மேற்சான்றுகள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia