கோஸ்டு இரைடர்
கோஸ்டு இரைடர் (Ghost Rider) என்பது 2007 ஆம் ஆண்டு இயக்குநர் மார்கு இசுடீவன் ஜான்சன் என்பவர் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் மார்வெல் வரைகதையில்[8] தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் மகிழ்கலை உடன் இணைந்து கிரிஸ்டல் இசுகை பிக்சர்சு மற்றும் ரிலேட்டிவிட்டி மீடியா ஆகியவை தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிகர் நிக்கோலஸ் கேஜ் என்பவர் ஜானி பிளேசு / கோஸ்டு இரைடர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் சேர்ந்து ஈவா மெண்டிசு, வெசு பென்ட்லி, சாம் எலியட், டோனல் லாக், பீட்டர் ஃபோண்டா போன்ற பலர் நடித்துள்ளார்கள். கோஸ்டு இரைடர் படம் பிப்ரவரி 16, 2007 அன்று அமெரிக்காவில் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக உலகளவில் $ 228.7 மில்லியன் வசூலித்து வெற்றி பெற்றது.,[9] இப்படத்தின் தொடர்சியாக கோஸ்டு இரைடர் 2 என்ற படம் பிப்ரவரி 17, 2012 இல் வெளியானது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia