இது 2007 ஆம் ஆண்டு வெளியான கோஸ்டு இரைடர்[7] என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாக நிக்கோலஸ் கேஜ், சியாரான் கிண்ட்சு, விசாலண்டே பிளாசிடோ, ஜானி விட்வொர்த், கிறிஸ்டோபர் லம்பேர்ட் மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோரின் நடிப்பில் வெளியானது.
கோஸ்டு இரைடர்: இசுபிரிட்டு ஓப் வெங்கெங்சு படம் டிசம்பர் 11, 2011 அன்று ஒரு சிறப்பு இரவு காட்சியாக வெளியானது. பின்னர் பிப்ரவரி 17, 2012 அன்று 2டியில் உலகளவில் வெளியாகி விமர்சகர்களிடம் மோசமான விமர்சன வரவேற்பை பெற்று $132 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது.
இப்படத்தின் நடிகரான நிக்கோலஸ் கேஜ் கூறுகையில் கோஸ்டு இரைடர் படங்கள் முடிந்தது என்றும் திட்டமிட்ட தொடர்ச்சி ரத்து செய்யப்பட்டது எனவும் அறிவித்தார்.[8] இதனால் இந்த கதாபாத்திரத்திற்கான திரைப்பட உரிமைகள் மார்வெல் ஸ்டுடியோவிற்கு மாற்றப்பட்டு கோஸ்டு இரைடரின் 'ராபி ரெய்ஸ்' பதிப்பு ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் என்ற தொடரில் தோன்றியது.