ஹல்க் (திரைப்படம்)
ஹல்க் (ஆங்கிலம்: Hulk) இது 2003 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தின் வரைகதைகளில் தோன்றும் ஹல்க் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்க யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. அவி ஆராட், லாரி பிரான்கோ, கேல் அன்னே ஹர்ட், ஜேம்ஸ் ஸ்காமஸ் போன்றோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ஆங் லீ என்பவர் இயக்க, எரிக் பனா,[1][2] ஜெனிஃபர் கானலி, சாம் எலியட், ஜோஷ் லுகாஸ், நிக் நோல்டி[3][4] போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜூன் 20, 2003 அன்று உலகம் முழுவதும் வெளியாகி, உலகளவில் $245 மில்லியனை வசூலித்தது. மற்றும் 2003 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும். மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாவது படமாக தி இன்க்ரெடிபிள் ஹல்க் என்ற தலைப்பில் ஜூன் 13, 2008 அன்று வெளியிடப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia