சேராக்குப்பம்
மக்கள்சேராக்குப்பத்தில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊருக்கு நடுவே கடலூர்-சேலம் தொடர்வண்டிp பாதை செல்கிறது. சேராக்குப்பத்திலிருந்து வடலூர் செல்லும் வழியிலும் குறிஞ்சிபாடி செல்லும் வழியிலும் தொடர்வண்டி பாதை குறுக்கிடுகிறது. இவை ஆளில்லா கடவையாக உள்ளது. தொழில்இங்குள்ள மக்கள் வேளாண்மையை முதன்மையான தொழிலாக செய்து வருகின்றனர். பெரும்பாலும் நெல் பயிரிடப்படுகிறது. பாசனம்ஊருக்கு அருகில ஏரி ஒன்று உள்ளது. அது அய்யனேரி என அழைக்கப்படுகிறது. அது சுமார் 54 ஏக்கர் பரப்பளவு இருக்கும். மழைக்காலத்தில் வரும் நீரை இதில் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒரு போகம் நெல் பயிரிடுவது வழக்கம். ஆனால் தற்பொழுது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது. சந்தைஅய்யனேரிக்கு மேல் புறத்தில் உள்ள இடத்தில் வாரச்சந்தை நடைபெறும். வாரத்தில் சனிக்கிழமை தோறும் சந்தை நடைபெறும். சந்தையில் காய்கறிகள் விற்பனையாகும். காலை நேரத்தில் கோழி, ஆடு, மற்றும் மாடுகள் விற்பனையாகும். கோயில்சேராக்குப்பம் மக்கள் அய்யனேரிக்கு மேல் கரையில் உள்ள பிடாரி அம்மனை குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் வழிபடுகின்றனர். இங்கு குடிகொண்டுள்ள அம்மனை செல்லியம்மன் என்றும் அழைக்கின்றனர். செல்லியம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது. ஆடி முதல் நாள் அய்யனாரையும் பிடாரி அம்மனையும் ஊருக்கு தூக்கிச்சென்று சாகை வார்த்து (கூழ் வார்த்து) விழா எடுக்கின்றனர். பின் ஒவ்வொரு நாளும் பங்காளி உறவு முறையினர் படையல் செய்து தெருக்கூத்து நடத்துகின்றனர். விழா நிறைவுற்றவுடன் அம்மனையும் அய்யனாரையும் கோயிலுக்கு கொண்டு சென்று வைத்து விடுகின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia