ஜாஞ்சுகீர்
![]() ![]() ஜாஞ்சுகீர் (Janjgir) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்சுகீர்-சம்பா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். 1998-இல் பிலாஸ்பூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொன்டு ஜாஞ்சுகீர்-சம்பா மாவட்டம் உருவானது. ஜாஞ்சுகீர் தொடருந்து நிலையம் மாநிலத் தலைந்கர் ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் நகரங்களுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 200 பிலாஸ்பூர் மற்றும் ராய்ப்பூர் போன்ற பெரிய நகரங்களுடன் இணைக்கிறது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 21 வார்டுகளும், 8,690 வீடுகளும் கொண்ட நய்லா ஜாஞ்சுகீர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 40,561 ஆகும். அதில் ஆண்கள் 20,731 மற்றும் பெண்கள் 19,830 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5288 (13.04%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 957 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.10% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.59%, முஸ்லீம்கள் 3.52%, கிறித்தவர்கள் 1.45% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[1] இரயில் போக்குவரத்துஜாஞ்சுகீர் நைலா தொடருந்து நிலையம், ஜாஞ்சுகீர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. ஹவுரா-நாக்பூர்-மும்பை இருப்புப் பாதை பிரிவில் உள்ள ஜாஞ்சுகீர் நைலா தொடருந்து நிலையம், மும்பை, கொல்கத்தா, புனே, நாக்பூர், புரி, விசாகப்பட்டினம், டாடாநகர், ராய்ப்பூர், பிலாஸ்பூர் மற்றும் அகமதாபாத் நகரங்களுடன் இணைக்கிறது.[2][3] மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia