தாபோங் தொடருந்து நிலையம்
தாபோங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Dabong Railway Station மலாய்: Stesen Keretapi Dabong) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், கோலா கிராய் மாவட்டம், தாபோங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரான கோத்தா பாரு நகரில் இருந்து சுமார் 155 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1] இந்த நிலையம் தும்பாட் மற்றும் தாபோங் நகரங்களுக்கு இடையே செல்லும் கிழக்கு நகரிடை சேவையின் முனையமாகும். தாபோங் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. தாபோங் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[2]
பொதுகிளாந்தான் மாநிலத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள முக்கிய நகரங்களுடன் கோலா கிராய் பகுதிகளை இணைக்க 1920-களில் தாபோங் தொடருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. தாபோங் தொடருந்து நிலையத்தின் தொடருந்து பாதை கோலா கிராய் நகரத்தின் வழியாக தாபோங் நகரத்தையும் கடந்து செல்கிறது.தாபோங் நகரத்தின் மையத்தில் தாபோங் தொடருந்து நிலையம் உள்ளது.[3][2] அந்தக் காலக்கட்டத்தில் தாபோங் நகரின் தொடருந்து பாதையின் இரு மருங்கிலும் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. சாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் உள்ளூர்க் கிராமங்களும் தோன்றின. 20-ஆம் நூற்றாண்டில் சாலைப் போக்குவரத்து இணைப்புகள் மேம்பட்டன. அதனால் தாபோங் நகரத்திற்கு மக்கள் அதிகமாகக் குடிபெயர்ந்தனர். வேளாண்மைக்கு தாபோங் நகரத்தில் கிடைத்த நிலங்களைப் பொதுமக்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். [4] மீன் குகைதாபோங் நகருக்கு அருகில் செல்லும் கலாஸ் ஆற்றுப் பகுதியில், புகழ்பெற்ற ’குவா ஈக்கான்’ எனும் மீன் குகை (Fish Cave) அமைந்துள்ளது. இந்த நகர்ப் பகுதி வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. தென்மேற்கில் 1422 மீட்டர் உயரத்தில் செத்தோங் மலை (Gunung Setong) உள்ளது. தாபோங் ஒரு மலைப்பாங்கான நகர்ப் பகுதி ஆகும்.[2] 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, அதன் முழுப் பகுதியும் வெப்பமண்டல மழைக்காடாக இருந்தது. செத்தோங் மலையில் இருந்து லெபிர் ஆறு கடந்து செல்கிறது.[5] நிலைய வசதிகள்
தொடருந்து சேவைகள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia