கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம்
கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kuala Lipis Railway Station மலாய்: Stesen Keretapi Kuala Lipis) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், லிப்பிஸ் மாவட்டம், கோலா லிப்பிஸ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 235 கி.மீ.;கோலாலம்பூரில் இருந்து 171 கி.மீ.; தொலைவில் உள்ளது.[1] இந்த நிலையம் கோலா லிப்பிஸ் மற்றும் மெராப்போ நகரங்களுக்கு இடையிலான கிழக்கு நகரிடை சேவையில் ஒரு முனையமாக விளங்குகிறது. கோலா லிப்பிஸ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. கோலா லிப்பிஸ் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[2] பொதுகோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் கோலா லிப்பிஸ் நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. தூரப் பயணங்களுக்கு, தனியார் பேருந்துச் சேவைகளைவிட பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் கோலா லிப்பிஸ் - குவா மூசாங் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது.[3] ஜொகூர் பாரு மற்றும் தும்பாட் இடையிலான தொடருந்துச் சேவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செயல்படுகிறது. அத்துடன் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள தொடருந்துகள், ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள பல தொடருந்து நிலையங்களில் நின்று செல்கிறது.[4] பேருந்து சேவை
நிலைய வசதிகள்
தொடருந்து சேவைகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia