இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவையை வழங்குகிறது. வாக்காப் பாரு நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், வாக்காப் பாரு நகரத்தின் பெயரில் இந்த நிலையம் அழைக்கப்படுகிறது. இந்த நிலையம் இப்போது பெரும்பாலும் மலாயர்களின் பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
வாக்காப் பாரு தொடருந்து நிலையம் ஒரு சிறிய நிலையமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் இருந்தும் 4 தொடருந்துகளுக்குச் சேவை செய்கிறது. மலேசியா ஒரு பிரித்தானிய காலனியாக இருந்தபோது 1948-ஆம் ஆண்டில் இந்தத் தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.
ஜொகூர் பாருவில் இருந்து ஒவ்வொரு நாளும் பயணிக்கும் ஒற்றைத் தொடருந்து சேவையின் வருகை, இந்த நிலையத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.[3]
தொடருந்து சேவைகள்
ராக்யாட் தீமோரான் விரைவு தொடருந்து 26/27 தும்பாட்-ஜொகூர் பாரு சென்ட்ரல் - (Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral)
தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து 51/52/57/60 தும்பாட்-குவா மூசாங் - (Shuttle Timur 51/52/57/60 Tumpat–Gua Musang)
தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து 55/56 தும்பாட்-தாபோங் - (Shuttle Timur 55/56 Tumpat–Dabong)