மெராப்போ தொடருந்து நிலையம்
மெராப்போ தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Merapoh Railway Station மலாய்: Stesen Keretapi Merapoh) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், லிப்பிஸ் மாவட்டம், மெராப்போ நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 315 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1] இந்த நிலையம் கோலா லிப்பிஸ் மற்றும் மெராப்போ நகரங்களுக்கு இடையிலான கிழக்கு நகரிடை சேவையின் ஒரு முனையமாக விளங்குகிறது. மெராப்போ நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. மெராப்போ நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1] பொதுதாமான் நெகாரா தேசியப் பூங்காமெராப்போ நகரம், தகான் மலை அடிவாரத்தில் இருப்பதால் தித்திவாங்சா மலைத்தொடரில் மலைப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இறுதி நகர முனையமாகவும் விளங்குகிறது. மெராப்போ நகரம் ஒரு சிறிய நகரம்; தகான் மலையின் சுங்கை ரெலாவு (Sungai Relau) மலைக் கிராமத்திற்குச் செல்வதற்கு முன் மெராப்போ நகரம் ஒரு நிறுத்தமாகச் செயல்படுகிறது.[2] தாமான் நெகாராவிற்கு ஒரு நுழைவாயிலாகவும் இந்த நிலையம் உள்ளது. அந்தக் காரணத்தினால், தித்திவாங்சா மலைத்தொடருக்கும் தாமான் நெகாரா தேசியப் பூங்காவிற்கும் தொடருந்து சேவைகளை வழங்கும் ஒரு முக்கிய இடமாகவும் உள்ளது. லிப்பிஸ் மாவட்டத்தில் பகாங் - கிளாந்தான் எல்லைக்கு அடுத்ததாக மெராப்போ நகரம் அமைந்துள்ளது.[2] கோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்மெராப்போ தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் மெராப்போ நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. தூரப் பயணங்களுக்கு, தனியார் பேருந்துச் சேவைகளைவிட பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் கோலா லிப்பிஸ் - குவா மூசாங் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது.[3][4][2] ஜொகூர் பாரு மற்றும் தும்பாட் இடையிலான தொடருந்துச் சேவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செயல்படுகிறது. அத்துடன் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள தொடருந்துகள், ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள பல தொடருந்து நிலையங்களில் நின்று செல்கிறது.[3] நிலைய வசதிகள்
தொடருந்து சேவைகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia