மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line) இந்த நிலையம் உள்ளது. மலேசியாவில் அதிக அளவிலான பயணிகளைக் கொண்ட தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[3]
எக்சுபிரஸ் ராக்யாட் 26/27 - Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral[4]
எக்சுபிரஸ் மாக்முர் 34/35 - Ekspres Makmur 34/35 Kuala Lipis–Gemas[4]
மெந்தகாப் நகரம்
மெந்தகாப் (Mentakab) பகாங் மாநிலத்தில், தெமர்லோ மாவட்டத்தில் உள்ள நகரம். இந்த நகரம் முன்பு பாசிர் ராவா என்று அழைக்கப்பட்டது. பின்னர் பெயர் மாற்றம் பெற்று மெந்தகாப் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நகரம் தெமர்லோ, லஞ்சாங், கம்போங் துவாலாங், மெங்காராக், மற்றும் கெர்டாவ் ஆகிய வட்டாரங்களுக்கு அருகில் உள்ளது. 1901-ஆம் ஆண்டு இந்த நகரை பகாங் மாநிலத்தின் தலைநகராக நியமிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்தது. இருப்பினும் நிலப் பற்றாக் குறையினால், குவாந்தான் நகரம் மாநிலத் தலைநகராகத் தகுதி பெற்றது.