கேரள மாநில அரசு போக்குவரத்து கழக தலைமையிடம், திருவனந்தபுரம் மாநகராட்சி.
திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி என்பது இந்தியாவின்கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஆறு மாநகராட்சிகளுள் திருவனந்தபுரம் மாநகராட்சியும் ஒன்றாகும். மேலும் தென்னிந்திய மாநகராட்சிகளுள் மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். தென்னிந்தியாவில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கோயம்புத்தூருக்கு அடுத்த ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும்.
திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி
— மாநகராட்சி —
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டசபை
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டசபை
திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி
அமைவிடம்: திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி, Kerala
திருவனந்தபுரம் மாநகராட்சியானது 214.86 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது ஆகும். தென்னிந்தியாவின் பெருநகர மாநகராட்சிகளுள் திருவனந்தபுரமும் ஒன்றாகும்.[2]
மாநகராட்சி மேயர்
சிபிஐ (எம்) இன் திருவனந்தபுரம் கார்ப்பரேஷனின் தற்போதைய மேயராக ஆர்யா ராஜேந்திரன் எஸ்.[3]
மாநகராட்சி மக்கள் தொகை
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 20,35,104 ஆகும். [31] (நவம்பர் 2006 நிலவரப்படி, இது சுமார் 1.1 மில்லியனாக இருந்தது). ஆனால் தற்போது மாநகராட்சி பகுதியில் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். நகரத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3500 பேர். திருவனந்தபுரம் மாவட்டம் 90% கல்வியறிவைப் பெற்றுள்ளது. நகரத்தில் பாலின விகிதம் 1,000 ஆண்கள் 1,037 பெண்கள். மக்கள் தொகையில் 65% இந்துக்கள், 18% கிறிஸ்தவர்கள், 15% முஸ்லிம்கள். இங்கு பேசப்படும் முக்கிய மொழி மலையாளம். இருப்பினும், ஆங்கிலம் மற்றும் இந்தி பெரும்பாலும் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பெரிய தமிழ் பேசும் சிறுபான்மையினர் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான கொங்கனி / துளு மொழி பேசுபவர்கள் உள்ளனர்.
திருவனந்தபுரம் மாநகராட்சி
திருவனந்தபுரம் மாநகராட்சி
பரப்பளவு
216.86 ச.கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி
7,43,691
பெருநகர மாநகராட்சி மண்டலங்கள்
கிழக்கு மண்டலம்
மேற்கு மண்டலம்
தெற்கு மண்டலம்
வடக்கு மண்டலம்
மத்திய மண்டலம்
மாநகராட்சி வட்டங்கள்
100 வட்டங்கள்
இம்மன்றத்திற்காக அமைக்கப்பெற்ற நிலைக்குழுக்கள்
வரி மற்றும் நிதிக் குழு
பணிக்குழு
திட்டக் குழு
நல்வாழ்வுக் குழு
கல்விக் குழு
கணக்கிடுதல் குழு
திருவனந்தபுரம் மாநகரம் மற்றும் நெய்யாட்டிங்கரா தாலுகா ஆகியவை திருவனந்தபுரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும், திருவனந்தபுரம், நேமாம், வட்டியூர்காவு, கஜகூட்டம் மற்றும் கோவலம் (பகுதி) தொகுதிகள் திருவனந்தபுரம் மாநகராட்சியில் அமைந்துள்ளன.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் 23 வருவாய் கிராமங்கள் உள்ளன. அவை பங்கப்பாரா, உலியார்த்துர், கஜகூட்டம், அயிருப்பாரா, விஜின்ஜாம், தைகாடு, மனக்காடு, திருமலை, செருவாய்கல், உல்லூர், பட்டோம், குடப்பனகுன்னு, பெரூர்கடா, காவதியார், வாட்டியாட்டம், வாட்டியாட்டகவம் ஆகிய பகுதிகள் மாநகராட்சியுள் அடங்கும்.
மாநகராட்சி மொத்த வார்டுகள்
திருவனந்தபுரம் மாநகராட்சியானது ஐந்து பெரு மண்டலங்களையும் நூறு வார்டுகளையும் கொண்டுள்ளது. அவைகள்