திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்
திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 36ஆவது சிவத்தலமாகும். மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். [2] தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் திருவாவடுதுறை எனும் ஊரில் புராண பெருமைகள் நிறைந்த கோமுக்தீசுவரர் (மாசிலாமணி ஈசுவரர்) கோயில் அமைந்துள்ளது [3]. இக்கோயில், ஏறக்குறைய பத்து ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜ கோபுரமும், மூன்று பிராகாரங்களும் கொண்டது. வடக்குப்புற நுழைவாயிலில், புதிதாக மூன்று நிலை ராஜகோபுரமும் எழுப்பப்பட்டுள்ளது [4]. மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்[5]. மூர்த்திச் சிறப்புசுயம்பு மூர்த்தியாக விளங்கிடும் இக்கோயிலின் மூலமூர்த்தி கோமுக்தீசுவரர் என அழைக்கப்படுகின்றார். அம்பாள் ஒப்பில்லாமுலைநாயகி ஆவார். இக்கோயிலின் மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் என அழைக்கப்படுகின்றது. துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் இவ்வாலயத்தில் விநாயகர் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். திருமூலர்திருமூலர் திருமந்திரம் இயற்றிய திருத்தலமிது.[6] கோயிற் சிறப்புகள்
தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்திதமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் இத்திருத்தலத்திலேயே அமைந்துள்ளார். இவரது உயரம் 14 அடி 9 அங்குலம். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயில் ஒரே கல் நந்தியின் உயரம் 12 அடி).தர்மதேவதையே இந்த நந்தியெம்பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம்[6] இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
படத்தொகுப்பு
|
Portal di Ensiklopedia Dunia