களப்பால் அழகியநாத சுவாமி கோயில்

அழகியநாத சுவாமி கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:களப்பால்
கோயில் தகவல்
மூலவர்:அழகியநாத சுவாமி
தாயார்:பிரபாநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

களப்பால் அழகியநாத சுவாமி கோயில் என்ற சிவன் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள களப்பால் என்னுமிடத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும். திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்று என்னும் பெருமையையுடையது.[1]

அமைவிடம்

திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 3 கி.மீ. அடுத்து மடப்புரம் உள்ளது. மடப்புரத்தின் இடப்புறம் வழியாக சென்றால் களப்பாலை அடையலாம். களப்பாலை கோயில் களப்பால் என்றும் அழைக்கின்றனர்.

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் அழகியநாத சுவாமி என்றும் ஆதித்தேச்சுரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பிரபா நாயகி ஆவார். களப்பால் கூற்றுவ நாயனார் அவதரித்த தலமாகும்.[1]

பிற கோயில்கள்

இவ்வூரில் கயிலாய நாதர் கோயிலும், ஆனைகாத்த பெருமாள் கோயிலும் உள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya