முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்
முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் (Muslim Rashtriya Manch (MRM; மொழிபெயர்ப்பு: முஸ்லீம் தேசிய மன்றம்) இந்திய முஸ்லீம்களின் அமைப்பான இது ராஷ்டிரிய சுயமசேவாக் சங்கத்துடன் இணைந்தது. இவ்வமைப்பு ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே. எஸ். சுதர்சன் என்பவரால் 24 டிசம்பர் 2002 அன்று நிறுவப்பட்டது. இவ்வமைப்பின் நோக்கம் முஸ்லீம் சமூகத்தில் இந்திய தேசிய உணர்வு, நாட்டுப் பற்று ஊட்டுவதுடன், சகப்பரிவாரின் இந்துத்துவா கொள்கைகளை இந்திய முஸ்லீம்கள் அறியச் செய்வதாகும். [2]இதன் தேசியத் தலைவராக முகமது அப்சல் உள்ளார். இந்தியாவின் 26 மாநிலங்களில் உள்ள 300 மாவட்டங்களில் 10 இலட்சம் உறுப்பினரகள் இவ்வமைப்பில் உள்ளனர்.[3]உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோகா குறித்து 2015-இல் முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் யோகா மற்றும் இஸ்லாம் தலைப்பில் நூல் ஒன்றை இசுலாமியர்களுக்காக வெளியிட்டது. முஸ்லீம் இராஷ்டிரிய மஞ்சின் மகளிர் அணி, இந்தியாவில் முத்தலாக் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதை வரவேற்றுள்ளது.[4] மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia