பூக்குழித் திருவிழா![]() ![]() பூக்குழித் திருவிழா என்பது, தமிழகத்தின் பெரும்பாலான மாரியம்மன் ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு திருவிழா ஆகும்.[1] இத்திருவிழா, பூமிதித் திருவிழா என்றும் அழைக்கப்படும். இலங்கையில் தீமிதிப்பு மாரியம்மன், காளியம்மன், கண்ணகி, திரௌபதி அம்மன் ஆலயங்களில் நடைபெறுகின்றன. இலங்கையில் தேசத்துக் கோயில்கள் என வழங்கப்படுகின்றன. அரசு மானியம் பெறும் சில ஆலயங்கள் கூட தீமிதிப்பு நடைபெறும் ஆலயங்களாக உள்ளன. பூக்குழி அமைப்புசற்று குழிவான ஒரு நிலப்பரப்பில் மரத்துண்டங்களை எரித்து, கங்கினை உருவாக்குவர். விரதம் மேற்கொண்ட பக்தர்கள், இந்த கனன்றுகொண்டிருக்கும் 'கங்குப் படுகை'யின் மேல் வெறுங்காலில் நடந்து செல்வர். பக்தியின் காரணமாக நெருப்பு, பூ (மலர்) என கருதப்பட்டு பூக்குழித் திருவிழா என சொல்லப்படுகிறது. திருவிழா அன்று காலையில் குண்டத்தில் மரக்கட்டைகளை குவிப்பர். இதில் வேப்பமரத்தின் கட்டைகள் பெரும்பான்மையாகும். ஆலயத்தின் முக்கியக் கருவறையிலிருந்து எரியும் கற்பூரம் கொண்டு வரப்பட்டு, அந்த நெருப்பினால் மரக்கட்டைகள் பற்ற வைக்கப்படும். பக்தர்கள் கொண்டு வரும் நல்லெண்ணெயும் நெய்யும் கூடுதல் எரிபொருளாக, எரியும் மரக்கட்டைகளின் மீது ஊற்றப்படும். மரக்கட்டைகள் நன்கு எரிந்து துண்டங்களான பிறகு, அந்த கங்குகள் பரவிவிடப்பட்டு ஒரு படுகை போல உருவாக்கப்படும். விரதம் மேற்கொண்ட பக்தர்கள், வீதிவலம் வந்து இறுதியில் ஒருவர் பின் ஒருவராக அந்தக் கங்குப்படுகையின் மீது நடப்பர். பொதுவாக அம்மன் வீற்றிருக்கும் சப்பரமும் வீதிவலம் வந்து குண்டத்தின் முன் நிறுத்தப்படும். தமிழகத்தில் பூக்குழித் திருவிழா நடக்கும் முக்கிய ஆலயங்கள்
இலங்கையில் பூக்குழித் திருவிழா நடக்கும் முக்கிய ஆலயங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia