கருட பஞ்சமிகருட பஞ்டமி என்பது ஆடி அமாவாசையை அடுத்து வருகின்ற பஞ்சமி திதியாகும்.[1] இது காஷ்யபர்- வினதை தம்பதிகளுக்கு கருடன் பிறந்த தினமாகும். இந்த நாளில் திருமாலின் வாகனமான கருடனை வணங்குவதும், திருமாலை வணங்குவதும் வைணவர்கள் செய்கின்ற செயலாகும். இந்நாளில் விரதம் இருந்து பூசை செய்தால் கருடனைப் போல பலசாலியாகவும், அறிவு நிறைந்தும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை. இந்த நாளில் ஆதிசேசனுக்கும் பூசை செய்வது வழக்கமாகும். சாக்தத்தில் கவுரி அம்மனை நாகவடிவில் இந்த நாளில் வழிபடுகின்றனர். தொன்மம்பிரம்ம தேவரின் மகனான காஷ்யபருக்கும், அவரது மனைவியான கத்ருவுக்கும் நாகர்கள் பிறந்தார்கள். மற்றொரு மனைவியான வினதாவுக்கு அருணன் மற்றும் கருடன் பிறந்தனர்.. ஒரு முறை கத்ருவுக்கும், வினதைக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அந்தப் போட்டியின்படி ஜெயித்தவருக்கு தோற்றவர்அடிமையாக வேண்டும். போட்டியில் தோற்ற வினதா கத்ருவுக்கு அடிமையானாள். இந்திரனிடமிருந்து கருடன் அமர்தக் கலசத்தினைக் கொண்டுவந்தால், கருடனையும், அவன் தாயான வினதாவையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துவிடுவதாக கத்ரு கூறினாள். இதனால் தேவலோகத்திலிருந்து கருடன் அமர்தக் கலசத்தினைப் பெற்றுவந்தான். ஆதாரங்கள் |
Portal di Ensiklopedia Dunia