பாரிஜாத மரம் (கிண்டூர்)![]() ![]() ![]() பாரிஜாத மரம் (Parijaat tree), இதனை தமிழில் பவழமல்லி என்றும் அழைப்பர்.வட இந்தியாவில் இம்மரத்தை புனிதமாக கருதுகின்றனர். இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிண்டூர் கிராமத்தில் மிகப்பழமையான பாரிஜாத மரம் உள்ளது. அதனை அக்கிராம மக்கள் புனித மரமாக கருதி வழிபடுகின்றனர். பாரிஜாத மரத்தின் பூக்கள் வெண்மையான இதழ்களும், ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான பாரிஜாத மலர் தேவலோக மரம் ஆகும். பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என புராணங்கள் கூறுகிறது. பாரிஜாத மலர்கள் இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் நறு மணத்தை பரப்பும் தன்மை கொண்டது. புராண & இதிகாசங்களில்இந்து தொன்மவியலில் பாரிஜாத மரம் இந்திர லோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பாரிஜாத மலர் குறித்து பாகவத புராணம் மற்றும் மகாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது.[1][2][3] மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia