தாலாட்டு (தொலைக்காட்சித் தொடர்)
தாலாட்டு என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 26, 2021 ஆம் ஆண்டு முதல் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஷாக் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க கிருஷ்ணா,[2] ஸ்ருதி ராஜ்[3] மற்றும் ஸ்ரீலதா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 24 சூன் 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 704 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
விஜயகிருஷ்ணனின் குடும்பத்தினர்
இசை குடும்பத்தினர்
துணைக் கதாபாத்திரம்
நடிகர்களின் தேர்வுஇந்த தொடரில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ராஜ் என்பவர் நடிக்கின்றார். இவர் இதற்க்கு முன்பு இதே தொலைக்காட்சியில் தென்றல் (2009-2015), அபூர்வ ராகங்கள் (2015-2018), அழகு (2018-2020) போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.[5] இவருக்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா என்பவர் 'விஜயகிருஷ்ணன்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இருவரும் இணைத்து நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். இந்த தொடரின் இளவயது கதைக்கள கதாபாத்திரத்தில் சந்திரபாபு, கிரண், ஹரிப்ரியா, சந்தோஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஸ்ரீலதா, ரிஷி கேசவ், தருணி, மோகன் சர்மா, டெல்லி கணேஷ் போன்ற பல பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஒளிபரப்பு நேரம் மாற்றம்இந்த தொடர் ஏப்ரல் 26, 2021 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் அக்டோபர் 18, 2021 முதல் பிற்பகல் 3 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.
மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia