மாநில நெடுஞ்சாலை 203 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 203 அல்லது எஸ்.எச்-203 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் என்னும் இடத்தையும்,புதுச்சேரி மாநிலத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் கூனிமுடக்கு என்ற இடத்தையும் இணைக்கும் முண்டியம்பாக்கம் - புதுச்சேரி சாலை ஆகும். 40 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தமிழ்நாடு 21.4 கி.மீ. நீளப் பகுதியையும், புதுச்சேரி 18.6 கி.மீ. நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன.

இந்த நெடுஞ்சாலை, புதுச்சேரி மாநிலத்தில் RC-4 சாலையாக புதுச்சேரி கடற்கரையில் தொடங்கி பின் நேரு சாலை,காமராஜ் சாலை மற்றும் பத்துகண்ணு சாலை வழியாக புதுச்சேரி மாநிலத்தின் எல்லை ஊரான கூனிச்சம்பட்டு வரை செல்கிறது. இதை வழுதாவூர் சாலை என்றும் அழைக்கபடுகிறது. சுருக்கமாக சொன்னால், இந்த நெடுஞ்சாலை புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை - 45யை நேரடியாக இணைக்கிறது.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya